கேளுங்க சொல்கிறோம்
* விதியை நம்மால் வெல்ல முடியுமா?பி.கோமதி, சென்னைவிதியைக் கட்டுப்படுத்த பக்தி உதவும். சத்தியவான் சாவித்ரி, மார்க்கண்டேயர் வரலாறை படித்தால் உண்மை புரியும்.* தமிழ் மாதப் பிறப்பிற்கும், சூரியனுக்கும் என்ன தொடர்பு?எல். காவ்யா, புதுச்சேரிசூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகும் நாளே தமிழ் மாதப்பிறப்பு. இதில் சித்திரை, ஆடி, தை மாதப் பிறப்புகளை சித்திரை விஷு, தட்சிணாயன, உத்ராயண புண்ணிய காலம் எனக் கொண்டாடுகிறோம். * பிரேதம் போகும் போது கடுகு துாவுகிறார்களே... சரியா...ஆர்.ரம்யா, திருப்பூர்நடைமுறையில் பொரி, உதிரிப்பூக்களை துாவும் வழக்கம் உள்ளது. நீங்கள் சொல்வது போல சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லா இடங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.* செவ்வாய், சனிக்கிழமைகளில் முகூர்த்தம் வருவதில்லையே...ஏன்எம்.ராஜாராம், தேனிநவக்கிரகங்களில் செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியவை பாவ கிரகங்கள். எனவே செவ்வாய், சனிக்கிழமைகளிலும், ராகுவுக்கு உரிய ராகு காலம், கேதுக்குரிய எமகண்டத்திலும் முகூர்த்தம் வராது.தாமரைத் தண்டில் திரியிட்டு வீட்டில் விளக்கேற்றலாமா...மெய். முருகப்பா, காரைக்குடி திரிகளில் தாமரைத்தண்டு சிறப்பானது. இதில் விளக்கேற்றினால் கடன், வறுமை, முன்வினை பாவம் தீரும்.பழநி முருகனை ராஜ அலங்காரம் அல்லது ஆண்டிக்கோலம் எதில் தரிசிப்பது நல்லது?வி.ராஜேஷ், விழுப்புரம்எதில் தரிசித்தாலும் பலன் ஒன்றே.அம்மனுக்குரிய மாவிளக்கை சிலர் முருகனுக்கும் ஏற்றுகிறார்களே...பி.கேதார், மதுரைஏற்றலாம். குலதெய்வமாக முருகனைக் கொண்டவர்கள் இப்படி செய்வது வழக்கம். மறுபிறவியில் நலமுடன் வாழ என்ன செய்ய வேண்டும்?எம்.கவுசிகா, குளச்சல்இப்பிறவியில் நல்ல செயல்களை மட்டும் செய்யுங்கள்.