உள்ளூர் செய்திகள்

ஸ்ரீநாராயணீயம்

த்ரபாஜுஷோஸ் மாத் ப்ருது கம்பலாததப்ரக்ருஹ்ய முஷ்டௌஸ் க்ருதாஷிதே த்வயா!க்ருதம் க்ருதம் நன்விய தேதி ஸம்ப்ரமாத்ரமா கிலோ பேத்ய கரம் ருரோததே !!நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய்வெல்பகையும் நட்பும் வேடமும் அமுதமும் ஆய்பல்வகையும்பரந்தபெருமான் என்னைஆள்வானைசெல்வம் மல்குகுடி திருவிண்ணகர் கண்டேனேஎன பாசுரத்தில் கூறியுள்ளபடி நரகம், சொர்க்க அனுபவமும் மகாவிஷ்ணுவாகவே இருக்கின்றன. தன்னுடன் படித்த ஏழை நண்பன் குசேலரை தொடக்க வாழ்வில் வறுமையில் உழலவிட்டு, பின்னாளில் அவரிடமிருந்து ஒருபிடி அவல் பெற்ற கிருஷ்ணர் செல்வத்தை வாரிக் கொடுத்தார். ஒருபிடி அவல் அனைத்து செல்வத்தையும் கொடுத்தது. அதன்பின் ருக்மணி போதும் என கிருஷ்ணரின் கையை பிடித்தாள் என்கிறார் நாராயண பட்டத்ரி. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்ல நமக்கு 16 வகை செல்வமும் கிடைக்கும். பட்டத்ரியின் அடுத்த முக்கியமான சுலோகம் 94-தசகத்தில் 9- வது ஸ்லோகமாக பக்தி யோகத்தினை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது ஆகும்.- எல்.ராதிகா, திருச்சிradhu_g16@yahoo.co.in