ஸ்ரீநாராயணீயம்
யத்யல் லப்யேத தத்தத் தவ ஸமுபஹ்ருதம் தேவதாஸோஸ்மி தேஹம்த்வத் கேஹான் மார்ஜனாத்யம் பவது மம முஹு:கர்ம நிர்மாய யேவ Iஸூர்யாக்னி ப்ராஹ்மணாத் மாதிஷூ லஸித சதுர்பாஹும் ஆராதயே த்வாம்த்வத் ப்ரேமார்த்ர த்வரூபோ மமஸததம் அபிஷ்யந்ததாம் பக்தியோக: IIகூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் என்று ஓடும்வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும்ஆய்ச்சியர் வெண்ணைகள் காணில் அவன் உண்ட வெண்ணைய் ஈது என்னும் பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தேஎன்ற ஆழ்வார் பாசுரத்தில் கூறியபடி எதெல்லாம் நமக்கு கிடைக்கிறதோ அதை எல்லாம் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும். நாம் கடவுளின் அடிமை என்ற எண்ணத்தை விதைத்து நம்மால் எப்போதெல்லாம் செய்ய முடியுமோ அப்போதெல்லாம் கடவுள் சேவையாக கோயிலைச் சுத்தப்படுத்த வேண்டும். சூரியன், அக்னி, அந்தணர்கள் இவர்களின் வடிவத்தில் எம்பெருமானை காண வேண்டும். பக்தியோகம் இடைவிடாமல் பெருக வேண்டும் என பட்டத்ரி குருவாயூரப்பனை வேண்டுகிறார், இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்ல நமக்கும் பக்தியோகம் பெருகும்.- எல்.ராதிகா, திருச்சிradhu_g16@yahoo.co.in