உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* குழந்தை வரம் வேண்டி தேவர்களின் தாயான அதிதி விரதமிருந்தார். அதற்கு பயோவிரதம் என்று பெயர். * அதிதி, கஷ்யப முனிவர் தம்பதிக்கு பிறந்தவர் வாமனர். * வாமனர் என்பதற்கு 'குள்ளமானவர்' என்பது பொருள்.* 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என வாமனரை போற்றும் நுால் திருப்பாவை. * வாமனருக்கு 'உபேந்திரன்' (இந்திரனின் தம்பி) என்றும் பெயருண்டு. * மகாபலி நடத்திய யாகத்தின் பெயர் விஸ்வஜித்.* மகாபலி யாகம் நடத்திய இடம் நர்மதை நதிக்கரை.* தானம் கொடுத்த மகாபலிக்கு மகாவிஷ்ணு வழங்கிய பதவி இந்திர பதவி. * மகாபலியின் மனைவியின் பெயர் விந்தியாவளி.* வியாழக்கிழமையில் வாமனரை வழிபட்டால் குருதோஷம் நீங்கும்.* கருவில் வளரும் போதே விஷ்ணு பகவானின் பக்தனாக இருந்தவர் மகாபலியின் தாத்தா பிரகலாதன். * வாமனருக்கு தானம் அளிப்பதை தடுக்க வண்டாக வந்தவர் சுக்கிராச்சாரியார்.* திருவடியால் உலகளந்த மகாவிஷ்ணுவின் திருவடி பூலோகம் தாண்டி சத்தியலோகத்தை அடைந்தது. * சத்தியலோகத்தில் மகாவிஷ்ணுவின் திருவடிக்கு அபிஷேகம் செய்தவர் பிரம்மா.