மன்னருக்கு மரியாதை
மகாராஷ்டிராவில் உள்ள சதாராவில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். ஒருநாள் சீடர்கள் சூழ அங்குள்ள கிராமத்தில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்தார் மஹாபெரியவர். சீடர்களும் அருகில் வந்து நின்றனர். எதிரில் பழைய பங்களா ஒன்று இருந்தது. அதை சுட்டிக் காட்டியபடி, 'நீங்கெல்லாம் அந்த வீட்டுக்கு போங்கோ... அங்கு கூடத்தில் (ஹால்) பெரிய படம் ஒன்று இருக்கும். நான் கேட்டேன்னு சொல்லி கொண்டு வாங்கோ' என்றார்.திடீரென ஒரு வீட்டுக்குப் போய் படத்தைக் கேட்டால் என்ன சொல்வார்கள் என சீடர்கள் குழம்பினர். ஆனாலும் சுவாமிகள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் எனக்கருதி அங்கே சென்றனர். பங்களாவுக்கு வெளியே நின்ற காவலரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது உள்ளே இருந்து முதிய பெண் ஒருவர் வந்தார். அவரிடம் விபரத்தைக் கூறினர். மஹாபெரியவரின் பெயரைக் கேட்டதும் அவரது முகம் மலர்ந்தது. அங்கிருந்தபடியே சுவாமிகளை வணங்கிய அவர், உள்ளே அழைத்துச் சென்று படத்தைக் காட்டினார். துாசியாக இருந்ததால் அந்த படத்தில் இருப்பவர் யார் என்பது சீடர்களுக்குத் தெரியவில்லை. அதை எடுத்து வந்து சுவாமிகளிடம் காட்டினர். அதைச் சுத்தம் செய்த போது அதில் இருந்தது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி. அந்த படத்திற்கு சந்தன மாலை, உயர்ரக சால்வையை அணிவித்து மரியாதை செய்தார் மஹாபெரியவர். இதில் விசேஷம் என்னவென்றால் புறப்படும் போதே சந்தன மாலை, சால்வையை கொண்டு வருமாறு சீடர்களிடம் சொன்னது தான். சற்று நேரத்தில் பூக்கள், பழங்களுடன் பங்களாவில் இருந்தவர்கள் சுவாமிகளை தரிசிக்க வந்தனர். அப்போது சீடர்களிடம், 'சிவனுடைய அவதாரமான வீரசிவாஜியே சனாதன தர்மத்தைக் காப்பாற்றினார். இவரால்தான் பாரத தேசத்தில் இப்போதும் தர்மம் வாழ்கிறது' என்றார். மேலும் அவர், 'வந்திருக்கும் இவர்கள் சிவாஜியின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். உங்களுடன் பேசிய இவர் இந்த வம்சத்தின் 13வது மகாராணி' என்றார். அவரின் கண்களில் ஈரம் கசிந்தது. பழம், பிரசாதம் கொடுத்து ஆசியளித்தார் மஹாபெரியவர். வீரசிவாஜியின் படத்தை பாதுகாப்பாக வைக்கச் சொன்னார் காலத்தை கடந்த ஞானியான காஞ்சி மஹாபெரியவர்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* ஏகாதசி விரதம் இருந்தால் பாவம் தீரும். * குழந்தைப்பேறுக்கு வியாழன் அன்று விரதம் இரு.* நினைத்தது நிறைவேற 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள். * மனவலிமைக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் செல்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!-நாராயணீயம்எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com