குழந்தை வரத்திற்கு...
குழந்தையை இழந்தவர்கள் படும் துயரம் சொல்லில் அடங்காது. இவர்கள் தேனி மாவட்டம் போடிக்கு அருகிலுள்ள சிவனை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும். 90 ஆண்டுகளுக்கு முன்பு வாலகுருசுவாமி என்பவர் இங்கு வாழ்ந்தார். குழந்தை வேண்டி காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்றார். ஊர் திரும்பிய சில மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 'பாலாபிஷேகன்' எனப் பெயரிட்டு வளர்த்தார். ஆனால் சில ஆண்டுகளிலேயே நோய்வாய்ப்பட்டு குழந்தை இறந்தது. வாலகுருசுவாமி விரக்தியால் வேதனைப்பட்டார். அன்றிரவு கனவு ஒன்று வந்தது. அதில் ஊரிலுள்ள குன்றின் மீது துறவி ஒருவரும், அவரருகில் இறந்த மகன் பாலாபிஷேகன் இருப்பதையும் கண்டார். பெயரைச் சொல்லி அழைத்தார். மகன் வர மறுத்தான். “இவன் உன் மகனா?” என துறவி கேட்க, “ஆமாம் சுவாமி” என்றார் வாலகுருசுவாமி. “இவன் எனக்கு பணிவிடை செய்யட்டும். நீ வீட்டுக்குச் செல். உனக்கு இன்னொரு மகன் பிறப்பான்” என்றார் துறவி. “நீங்கள் யார்?” எனக் கேட்ட போது சிவபெருமானாக காட்சியளித்தார் துறவி. விழித்த எழுந்த வாலகுருசுவாமி கனவு பற்றி தெரிவித்து குன்றுக்கு உறவினர்களை அழைத்துச் சென்றார். அங்கு இரண்டு காலடிகளும், அதைச் சுற்றிலும் பூக்களும் இருப்பதைக் கண்டு வியந்தார். அங்கு சிவபெருமானுக்கு கோயில் கட்டத் தோண்டும் போது சிவலிங்கம் கிடைத்தது. அதையே பிரதிஷ்டை செய்தனர். இதன் பின் வாலகுருசாமிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். குழந்தையை இழந்தவர்கள், ஆண் குழந்தை வேண்டுபவர்கள் இங்கு அர்ச்சனை செய்து விளக்கேற்றுகின்றனர். எப்படி செல்வது: தேனியில் இருந்து 14 கி.மீ., துாரத்தில் போடி. இங்கிருந்து மூணாறு சாலையில் 4 கி.மீ., துாரத்தில் சி.பி.ஏ, கல்லுாரி. இங்கு பிரியும் சாலையில் 1 கி.மீ.,விசேஷ நாள்: சித்திரை திருவிழா, திருக்கார்த்திகை, பவுர்ணமி கிரிவலம்.நேரம்: காலை 8:30 - 12:00 மணி; மாலை 4:00 - 7:00 மணிதொடர்புக்கு: 96008 35111அருகிலுள்ள கோயில்: கோடாங்கிபட்டி சித்திரபுத்திர நயினார், 10 கி.மீ., (கேது தோஷம் தீர...)நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 6:00 மணிதொடர்புக்கு: 99944 98109