புகழுடன் வாழ...
ஒருவருக்கு பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவற்றை கொடுப்பவர் சூரியபகவான். இவரின் அருளைப் பெற திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகிலுள்ள நெய்தவாயல் அக்னீஸ்வரரை ஞாயிறன்று வணங்குங்கள். ராஜகோபுரம் இல்லாத சிறிய நுழைவு வாசலே கோயிலில் நம்மை வரவேற்கிறது. பின் நேராக சென்றால் கிழக்கு நோக்கி உள்ள அக்னீஸ்வரரை தரிசிக்கலாம். சிவலிங்கம் சற்று வெள்ளை நிறத்தில் இருக்கும். இங்கு சிறப்பம்சமே தீபாராதனைதான். சுவாமி முன் தீபாராதனை காட்டும் போது வெள்ளையாகவும், பின்புறம் கொண்டு செல்லும் போது கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். அதாவது சுவாமிக்கு பின்புறத்தில் தீபாராதனை காட்டினால், சிவலிங்கமே அக்னி ஜ்வாலையாக தெரியும். இதை தரிசித்தால் சூரியதோஷம் நீங்கும். ஞாயிறன்று உச்சிக் காலத்தின் போது தரிசித்தால் அந்தஸ்து உயரும். சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள் பால் அபிேஷகம் செய்து வில்வார்ச்சனை செய்கின்றனர். பிறகு தெற்கு நோக்கியிருக்கும் திரிபுரசுந்தரி அம்மனின் தரிசனம் நம் கண்களை நிறைக்கும். பாசம், அங்குசத்தை கைகளில் ஏந்தியும் அபய, வரத ஹஸ்தத்துடன் காட்சி தரும் இவளை பார்த்தால் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். அம்மனின் முன் ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டு பூஜை நடக்கிறது. வெள்ளி அன்று மாலையில் நடக்கும் விசேஷ பூஜையில் பங்கேற்றால் விருப்பம் நிறைவேறும். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் கஜபிருஷ்ட அமைப்பைக் கொண்டது. தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது. எப்படி செல்வது * திருவள்ளூரில் இருந்து மீஞ்சூர் 50 கி.மீ., அங்கிருந்து 3 கி.மீ., * கும்மிடிப்பூண்டியில் இருந்து மீஞ்சூர் 40 கி.மீ., அங்கிருந்து 3 கி.மீ.,விசேஷ நாள்: தமிழ்ப்புத்தாண்டு, ஆவணி ஞாயிறு, திருக்கார்த்திகை.நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 63817 42120, 92834 00969அருகிலுள்ள கோயில்: மீஞ்சூர் திருமணங்கீஸ்வரர் 14 கி.மீ., (சுக்கிர தோஷம் தீர...)நேரம்: காலை 7:30 - 12:30 மணி; மாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 98417 01988, 96779 75628