உள்ளூர் செய்திகள்

நம்பிக்கையுடன் செயல்படு

* கடவுள் மீது நம்பிக்கை வைத்து முயற்சியை தொடங்கு. எல்லாம் வெற்றியாகும்.* பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அன்பாக பேசு. *உணவிலும் உடையிலும் ஆடம்பரம் செய்யாதே. மீறினால் அத்தியாவசிய பொருட்களுக்கு கஷ்டப்படுவாய். *கடவுளை நினைத்துக்கொண்டே எந்தவொரு செயலிலும் ஈடுபடு. * மனிதனை மனிதனாக வாழச் செய்யவே மகான்கள் அவதரிக்கின்றனர். * உடம்பின் மீது அக்கறை காட்டு. * பிறர் தவறாக பேசினால் அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்து விடு. * சந்தோஷமாக வாழ்ந்தாலே போதும். அதுவே வாழ்க்கையின் பாதி பலமாகும்.* இயற்கையின் ரகசியத்தை உன்னால் அறிய முடியாது. * உண்மையானது, உண்மையற்றது எது என்பதை உணர்ந்தவனே அறிவாளி.* தற்பெருமை, அகங்காரம் இல்லாத இதயத்தில் கடவுள் வாழ்கிறார். * பிறருக்கு உணவு அளிப்பவரே சிறந்த கொடையாளி. * யாரிடமும் வீண் விவாதம் செய்யாதே. மீறினால் மனஅமைதியை இழப்பாய். * பிறர் நலனில் அக்கறை காட்டு. கடவுளின் அன்பு கிடைக்கும். * நல்ல மனதுடன் வாழ்ந்தாலே யாருக்கும் பயப்படத் தேவையில்லை.* உனக்கு தீமை செய்தவரை பழிவாங்க நினைக்காதே. சொல்கிறார் ஷீரடி சாய்பாபா