உள்ளூர் செய்திகள்

செல்வம் சேரணுமா

சம்பாதித்த பணம் தங்கவில்லை என கவலைபடுபவரா நீங்கள். காஞ்சிபுரம் மாவட்டம் பழந்தண்டலத்திலுள்ள ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.முன்பு இந்திரனின் வாகனமாகிய வெள்ளை யானை துர்வாசமுனிவர் கொடுத்த மாலையை அலட்சியம் செய்தது. அதைக்கண்டு கோபமுற்ற அவரின் சாபத்தால் பழந்தண்டலம் என்னும் இவ்வனத்தில் அது காட்டுயானையாக பிறந்தது. பூர்வ ஜென்ம வாசம் ஏற்பட இங்குள்ள சுயம்புலிங்கத்தை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றது வெள்ளை யானை. இதனால் சுவாமிக்கு ஐராவதீஸ்வரர் என்று பெயர். இங்குள்ள அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி. திங்கள் கிழமை, திருவாதிரை, அமாவாசை நாட்களில் நெய்தீபம் ஏற்றி சுவாமிக்கு வில்வ அர்ச்சனை செய்தால் செல்வம் பெருகும். நாயன்மார்களில் ஒருவரான கோட்செங்கசோழனால் கட்டப்பட்ட 72 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. யானை அமர்ந்து இருப்பது போல இங்கு கட்டப்பட்டுள்ள கருவறையின் மேலுள்ள விமானத்தை கஜபிருஷ்ட விமானம் என்பர். இக்கோயிலை பல்லவர்கள், விஜய நகர அரசர்கள் திருப்பணி செய்துள்ளனர். இக்கோயிலை சுற்றி வேதங்களே நான்கு வில்வ மரமாக வளர்ந்து சுவாமியை வழிபடுகிறது. பிரகாரத்தில் விநாயகர், காசி விஸ்வநாதர் முருகன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் சன்னதிகள் உள்ளன. அருகே இருக்கும் நந்தம்பாக்கம், அமரம்பேடு, சோமங்கலம், திருமுடிவாக்கம் ஆகிய சிவன் கோயில்களையும் தரிசிக்கலாம். எப்படி செல்வது :திருநீர்மலையில் இருந்து திருமுடிவாக்கம் வழியாக 5 கி.மீ., விசேஷ நாள்: சித்ரா பவுர்ணமி, ஆடி கார்த்திகை, பங்குனி உத்திரம்நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி தொடர்புக்கு: 98401 14336அருகிலுள்ள தலம்: திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோயில் 5 கி.மீ., (திருமணத்தடை விலக...)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 044 -- 2238 5484