நங்கநல்லூர் மஹாபெரியவா சரணாலயம்
காஞ்சி மஹாபெரியவர் அருளால் ஈரோட்டைச் சேர்ந்த ராஜகோபால் என்னும் பக்தரின் வாழ்வில் அற்புதம் நிகழ்ந்தது. ஐம்பதாம் வயதில் பக்கவாதம், புற்று நோயால் அவர் அவதிப்பட்ட போது, 'எப்போதும் காயத்ரி மந்திரத்தைச் சொல். உன் கர்மவினை தீரும்' என கனவில் தோன்றி காஞ்சி மஹாபெரியவர் ஆசியளித்தார். பக்தரும் குணமடைந்தார். அதனால் அவர் 'காயத்ரி ராஜகோபால்' (ஜி.ஆர்.,மாமா) என அழைக்கப்பட்டார். ஒருநாள் கனவில் தோன்றிய மஹாபெரியவர், 'சென்னை நங்கநல்லுாரில் எனக்கு கோயில் கட்டு' எனத் தெரிவித்தார். தயங்கி நின்றவரிடம், 'கோயில் கட்டுவதாக சங்கல்பம் செய். மற்றதை உன்னுள் இருந்து நானே பார்த்துக் கொள்கிறேன்' என்றார். அதன்படி உருவான கோயிலே 'சென்னை நங்கநல்லுார் மஹாபெரியவா சரணாலயம். சிறப்பம்சம் * பக்தர்களால் எழுதப்பட்ட இரண்டு கோடி ராம மந்திரம் தாமிர பெட்டகத்தில் வைக்கப்பட்டு, ஸ்துாபி நிறுவப்பட்டுள்ளது. அதன் மீது கை கூப்பிய நிலையில் அனுமன் காட்சி தருகிறார். * தரைத்தளத்தில் பக்தர்களுக்கு ஆசியளிக்கும் கோலத்தில் காஞ்சி மஹாபெரியவர் வீற்றிருக்கிறார். * முதல் தளத்தில் காமாட்சி, காயத்ரி தேவி சன்னதிகள் உள்ளன. பக்தர்களின் கர்மவினை தீர்க்கும் விதமாக துாங்காவிளக்கு எரிகிறது. * இரண்டாம் தளத்தில் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கம் உள்ளது. * முன்றாம் தளத்தில் அன்னபூரணி சன்னதி, அன்னதானக் கூடம் உள்ளன. * காஞ்சி மஹாபெரியவரின் வழிபாடு, குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. * 'மனிதமே புனிதம்' என்பது இதன் தாரக மந்திரம். முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்.22, 2024ல் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடக்கிறது. குருபூஜைபிரச்னைகள், கர்மாக்கள் நீங்கி நிம்மதியாக வாழ எளிய முறையில் வீட்டிலேயே பக்தர்கள் குருபூஜை செய்கின்றனர். இதற்காக தங்களின் நட்சத்திரம் உள்ளிட்ட விபரங்களுடன் பிரச்னைகளை குறிப்பிட்டு gurumahimai@hotmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புகின்றனர். காஞ்சி மஹாபெரியவரிடம் உத்தரவு பெற்று அதற்கான நெறிமுறைகளை ஜி.ஆர்.மாமா அனுப்புகிறார். இப்பணிக்கு கட்டணம் கிடையாது. முகவரி ஸ்ரீ மஹாபெரியவா சரணாலயம், 5, 5வது மெயின் ரோடு, கண்ணன் நகர், நங்கநல்லுார், சென்னை - 600 091.தொடர்புக்கு: 98416 33261* நங்கநல்லுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1.5 கி.மீ., * பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி,மீ.,