உள்ளூர் செய்திகள்

தமிழகத்தின் காசி

அக். 20 - தீபாவளிதீபாவளி அன்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசிக்க பாவம் தொலையும். இதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் கங்கை ஊற்றாக பொங்கும் அரியத்துறை சிவன் கோயிலுக்கு வாருங்கள். தமிழகத்தின் காசியாக விளங்கும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகில் உள்ளது. இங்கு குடியிருக்கும் வரமூர்த்தீஸ்வரரை தரிசித்தால் முன்னோர் சாபம் தீரும். மகரிஷி ரோமர் என்பவர் சிவனை தரிசிக்க விரும்பினார். பிரம்மாவிடம் இது பற்றிக் கேட்க, அவர் தர்ப்பையை பந்தாக மாற்றி உருட்டினார். பூமியில் இப்பந்து நிற்கும் இடத்தில் தவம் செய்யுங்கள். விருப்பம் நிறைவேறும்' என்றார் பிரம்மா. தர்ப்பை சக்கரம் நின்ற இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு மகரிஷி வரம் பெற்றார். அனுசூயா, அத்திரி தம்பதியின் மகனான முகுந்த முனிவர் சிவத்தல யாத்திரை சென்றார். அப்படி செல்லும் வழியில் பிரம்மச்சாரி ஒருவரிடம், ''காசிக்கு எப்படி செல்வது'' எனக் கேட்டார். அதற்கு அந்த பிரம்மச்சாரி, ''அவ்வளவு துாரம் செல்ல வேண்டாம். ஆரணி நதியில் நீராடி வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் காசியை தரிசித்த பலன் கிடைக்கும்'' என்றார். அதன்படி செய்யவே, பிரம்மச்சாரி வேடத்தில் இருந்தவர் பைரவராக காட்சியளிக்க, அவரது சடையில் இருந்து கங்கை வரத் தொடங்கியது. அரிய கங்கை நீரைக் கொண்டு வந்ததால் இத்தலம் அரியத்துறை என்றானது. இன்றும் ஆரணி நதியில் ஓரிடத்தில் கங்கை ஊற்றாக பொங்கி வருகிறது. இதை தலையில் தெளிக்க பிதுர் தோஷம் தீரும். வரமூர்த்தீஸ்வரரை வழிபட்டால் போதும். பாவம் அனைத்தும் தீரும். அழகின் வடிவான மரகதவல்லி இங்கு தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். இந்திரன் இங்கு வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் விலகப் பெற்றார். குரங்கு ஒன்று இங்குள்ள கங்கை நீரை குடித்து சிவனை வணங்கியதால் மறுபிறவியில் மன்னராகப் பிறக்கும் பேறு பெற்றது. இங்கு 1000 ஆண்டுகள் அரசமரமாக இருந்த கிருஷ்ணர் இங்கு சாப விமோசனம் பெற்றார். எப்படி செல்வது: சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்மிடிபூண்டி, திருப்பதி, காளஹஸ்தி, சத்தியவேடு செல்லும் பேருந்துகளில் ஏறி கவரைப்பேட்டையில் இறங்கவும். பின் அங்கிருந்து 6 கி.மீ.,விசேஷ நாள்: மகாளய அமாவாசை, தீபாவளி, மகாசிவராத்திரி.நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 98948 21712, 98433 51711அருகிலுள்ள கோயில்: திருக்கண்டலம் சிவானந்தேஸ்வரர் 25 கி.மீ., (விருப்பம் நிறைவேற...)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 99412 22814, 044 - 2762 9144