கோயம்புத்தூர் ஈச்சனாரி விநாயகர்
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்துச் சென்றனர். வழியில் வண்டியின் அச்சு ஒடிந்தது. அதன்பிறகு சிலையை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து காஞ்சி மகாப்பெரியவர் அருள்வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் ஈச்சனாரி விநாயகர் எனப்பெயர் பெற்றார். இக்கோயிலில் அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர நாட்களில் ஒவ்வொருவிதமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படும். இதை நட்சத்திர அலங்கார பூஜை என்பர்.