உள்ளூர் செய்திகள்

சொல்லையும் செயலையும் ஒன்றுபடுத்து

* உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக செயல்படாமல் சொல்லையும், செயலையும் ஒன்றுபடுத்து.* பலன் எதிர்பார்த்து அன்பு செலுத்தக் கூடாது. கைமாறு கருதாத அன்பே துாய்மையானது. * நிழல் போல் மனிதனைத் தொடரும் ஆணவத்தை விட்டு விலகு. * அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அது போல ஆசையற்ற ஞானிகள் மீண்டும் பிறப்பதில்லை. * கண்ணிரண்டும் மனதில் இருப்பதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும். * அறிவால் ஆராய்ச்சி செய்பவன் கடவுளை அறிய முடியாது. * கடவுள் ஒருவரே சத்தியப் பொருள். மற்ற அனைத்தும் பொய்யே.* கடவுளின் அருள் இல்லாவிட்டால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது. * கடவுளின் திருநாமத்திற்கு சக்தி அதிகம். அதை ஜபிப்பதற்குரிய தகுதி துாயபக்தி.* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிப்பவன் சமநிலை இழப்பதில்லை. * விவேகம், வைராக்கியம் இல்லாதவன் ஆன்மிக வாழ்வில் முன்னேற முடியாது. * யாருக்கும் துரோகம் செய்யாதே. மனசாட்சிக்கு மதிப்பளிப்பவன் ஒருபோதும் நிம்மதி இழப்பதில்லை. * கடவுளைச் சரணடைந்தால் பலவீனமான எண்ணத்தில் இருந்து விடுபடுவாய்.சொல்கிறார் ராமகிருஷ்ணர்