நீங்களே சிவனுக்கு பூஜை செய்யணுமா?
வடமாநிலக் கோயில்களில் பக்தர்களே சுவாமிக்கு பூஜை செய்வது போல, மதுரை அழகப்பன் நகர் மூவர் ஆலயத்தில் நாமே பூஜிக்கலாம்.படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்பவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு சன்னதிகள் இங்கு இருப்பதால் இக்கோயிலை 'மூவர் ஆலயம்' என அழைக்கின்றனர். இங்கு சிவராத்திரியை விசேஷமாக கொண்டாடுகின்றனர். கருவறையில் மூலவரின் பின்புறம் மகாவிஷ்ணு, மீனாட்சியம்மன், சொக்கநாதர் மணக்கோலத்தில் உள்ளனர். விநாயகர் முதல் அனுமன் வரை எல்லா தெய்வங்களும் புன்னகை ததும்ப இங்கே காட்சி தருகின்றனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள கனக துர்கைக்கு இங்கு சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில்(காலை 10:30 - பகல் 12:00 மணி) இவரை வழிபட்டால் திருமணத்தடை விலகும். செவ்வாய், வெள்ளியன்று பெண்களும், மற்ற நாட்களில் ஆண்களும் கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர். கோலம் இடுவது, மணியடிப்பது, மடைப்பள்ளியில் சமைப்பது, கோயிலைத் துாய்மைப்படுத்துவது என கோயில் பணிகளையும் பக்தர்களே செய்கின்றனர்.எப்படி செல்வது: மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் 2 கி.மீ., துாரத்தில் உள்ள அழகப்பன் நகரில் கோயில் உள்ளது.விசேஷ நாட்கள்: விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரிநேரம்: அதிகாலை 5:30 - 10:30 மணி; மாலை 5:30 - 8:30 மணிதொடர்புக்கு: 94431 06262அருகிலுள்ள தலம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் (3 கி.மீ.,)