உள்ளூர் செய்திகள்

தலவிருட்சங்கள் - 23

புன்னைநல்லுார் மாரியம்மன் -- புன்னைமரம்காவல் தெய்வமான அஷ்ட சக்திகளை நாட்டின் பாதுகாப்பிற்காக மன்னர்கள் பிரதிஷ்டை செய்வர். அவ்வாறு சோழ மன்னர்கள் தஞ்சாவூரின் கிழக்கு எல்லையான புன்னை வனத்தில் பிரதிஷ்டை செய்த அம்மனே புன்னை நல்லுாரில் உள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தான கோயிலான இங்குள்ள அம்மனின் சிலை புற்று மண்ணால் ஆனது. கோடை காலத்தில் புற்றில் இருந்து முத்து முத்தாக நீர்த்துளி(வியர்வை) தோன்றும். இதனால் 'முத்துமாரி' எனப்படுகிறாள். புற்று அம்மனுக்கு பூக்கள் மட்டுமே வைத்து வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவின்போது அம்மனை முத்துப்பல்லக்கில் தரிசிக்கலாம். மன்னரான கீர்த்தி சோழருக்கு அம்மனின் அருளால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தேவசோழன் என பெயர் பெற்ற அந்த குழந்தை வளர்ந்து சோழ நாட்டை நீண்டகாலம் ஆட்சி புரிந்தார். காலப்போக்கில் கோயில் சிதிலமாகி மறைந்தது. பிற்காலத்தில் தஞ்சை பகுதியை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் வெங்கோஜியின் கனவில், 'புன்னை வனத்தில் புற்றுக்குள் குடியிருக்கிறேன்' என அம்மன் தெரிவித்தாள். மன்னரும் கோயிலை எழுப்பி மாரியம்மனை வழிபட்டார். அதன் பின்னர் தஞ்சாவூர் மன்னர் தோஜாவின் மகளுக்கு அம்மை நோயால் பார்வை போனது. இங்கு வழிபட்டு மீண்டும் பார்வை கிடைத்தது. தோஜா ராஜா, மராட்டிய மன்னர் சிவாஜி, ராணி காமாட்சி அம்பா ஆகியோர் திருப்பணி செய்ததில் முக்கியமானவர்கள். அம்மை, தோல் நோய், வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள், கண் குறைபாடு உள்ளவர்கள் வழிபட்டு குணம் பெறுகின்றனர். நன்றிக்கடனாக மாவிளக்கு, வெல்லம், உப்பு காணிக்கை செலுத்துகின்றனர். அம்மனுக்கு சாம்பிராணி தைலம், புனுகு, ஜவ்வாது அபிஷேகம் செய்யும் போது கருவறையில் உஷ்ணம் வெளிப்படும். அதை தணிக்க தயிர், இளநீர் நைவேத்யம் செய்கின்றனர். அம்மை நோய் குணம் பெற்றவர்கள் இங்குள்ள உள்தொட்டி, வெளிதொட்டி தீர்த்தத்தை தங்களின் உடல் மீது ஊற்றிக் கொள்கின்றனர். புன்னைநல்லுார் கோயிலின் தலவிருட்சம் புன்னை. கேலோபில்லும் ஐனபில்லம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இது கேலோபிலேசியே குடும்பத்தை சேர்ந்தது. பெரிய மரங்களாக வளரும் சிறுபுன்னை, சுரபுன்னையும் இதன் இனத்தைச் சேர்ந்ததாகும். விதையில் இருந்து கிடைக்கும் டோம்பா ஆயில் மேலை நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சித்தர் போகர் பாடல்புன்னையுடப் பெயர்தனையே புகலக்கேளுபுன்னாகம் புருஷ ஆகச்சியமாகுந்துன்னையுட துங்காகி யாரர்த்தகேசமானதுடியான சூலேத புஷ்பகமுமாகும்வன்னையுட வாசனையாங் கெந்தியாகுமாசற்ற பத்திரமாம் வாதசைனியாம்வின்னையுட விரணங்கள் குட்டம்போகுமிடுக்காகும் புன்னையுட விபரமாமே.புன்னாகம், புருஷஆகச்சி, துாங்கியாரார், துாங்காகியாரத்த கேசம், சூதேல புஷ்பம், வாசனை கெந்தி, பத்திரம், வதன சைனி, விரணகுட்டம் போக்கி என பல பெயர்கள் புன்னை மரத்திற்கு உண்டு. அகத்தியர் பாடல்புன்னைப்பூ பித்தமென்பர் போராடு வன்மேகம்வின்னப் படர்ச்சித்த விப்பிரமம்-பின்னுங்கரப்பான் சொறிசிரங்கு காணா தகற்றும்உரப்பாம் மயக்கமுண்டாக்கும்.புன்னைப்பூவால் சொறி, சிரங்கு நீங்கும். இதன் நறுமணம் மயக்கத்தை உண்டாக்கி உடல் வெப்பத்தை அதிகரிக்கும். புன்னை விதைகளை மருந்தாக செய்து சாப்பிட வீக்கம் குறையும். இதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அல்லது பொடி காதில் தோன்றும் புண்களை போக்கும். தேரையர் பாடிய பாடல்சுன்ன விரணங் கடுஞ்சந்நி பாதமுடனின்ன லுறுவாதை யேகுங்காண் - புன்னைக்கொட்டைக்கம்மட்டோவென்னி லார்சூதி காவாய்வுமெய்கம்மிட் டாழ்வாய்வு மில்.புன்னை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்து தொக்கணம் செய்ய மூட்டுவாதம், காக்கை வலிப்பு நீங்கும். புன்னை நிகழ்த்திர் சயித்தியமுண்டாக்கும் விஷவி ரணங்களுக்காகாது காதை யடற்கண்ணாய்!நாட்பட்ட புண்கள் மறைய புன்னை எண்ணெய்யை 10 அல்லது 15 சொட்டுகள் நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து கொடுக்கலாம். புன்னையிலுண் டா நெய்யாற் பொங்குசந்நி பாதமுதன்மன்னியலைக் குங்கொடிய வாயுவுமுன் - பின்னிசிவும்பொல்லா வலியினமும் புண்கிருமி யுந்தொலையுமல்லார் குழலே யறி.புன்னை மலரை தலையில் வைத்தால் போதை உண்டாகி மயக்கம் ஏற்படும். புன்னை கொட்டையை பொடித்து துாவினால் காதில் தோன்றும் புண்கள் ஆறும். விரல் நகத்தை சுற்றி தோன்றும் வெடிப்பு, அரிப்பு, புண்கள் தீர விதைப்பொடியை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து தடவலாம். எப்படி செல்வது: தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ.,நேரம்: அதிகாலை 5:30 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 04362 - 267 740-தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்98421 67567