காரணம் என்ன தெரியலியே!
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
கோயம்புத்தூர் மாவட்டம் மத்தம் பாளையத்தில் உள்ளது காரணவிநாயகர் கோயில். ஏதோ ஒரு காரணத்தால் விநாயகர் இந்த இடத்தில் அமர்ந்ததால் 'காரண விநாயகர்' என அழைக்கப் படுகிறார். கருவறையில் விநாயகரின் அருகில் அவரது தந்தை சிவனின் வாகனமான நந்தி இருப்பது விசேஷ அம்சம். காரண விநாயகரின் சந்நிதி அருகில் அவரது தம்பியான காரண முருகனும், மாமாவான பெருமாளும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தில், கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்க்கை வாழவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.