உள்ளூர் செய்திகள்

மனநிறைவுடன் வாழுங்கள்

* தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே செல்ல தேவையில்லை. போட்டி மனப்பான்மை இல்லாமல் இருப்பதைக் கொண்டு மன நிறைவுடன் வாழ்வதே சிறந்தது.* நல்ல குடும்பம் பல்கலைக் கழகம். குடும்ப கடமைகளை விட்டு சமூகசேவையில் ஈடுபடுவது நல்லதல்ல. குடும்பத்தினரைப் புறக்கணித்து விட்டு, சமூகசேவை செய்பவன் பிற்காலத்தில் வருந்த நேரிடும்.* மனிதன் வெளி உலகத்தில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான். உண்மையில் மகிழ்ச்சி மனதில் இருந்தே பிறக்கிறது. அதை தெரிந்து கொள்ளாமல் அறியாமையில் மூழ்கி கிடக்கிறான்.* கோயில் வழிபாடும், கடவுளுக்கு நைவேத்யம் படைப்பதும் நன்றி செலுத்துவதன் அடையாளமே. கடவுளின் அருள் இல்லாமல் புல்லைக் கூட படைக்கும் சக்தி நமக்கில்லை.* பாவம் தீர வழி தெரியாமல் அலைகின்றனர். கணப்பொழுதில் பாவம் போக்கும் பொருள் ஒன்று இருக்கிறது. அதுவே கடவுளின் திருநாமம். நாக்கு பெற்றதன் பயன், பக்தியுடன் கடவுளின் பெயரைச் சொல்வது மட்டுமே.* வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால் அதன் பின் நாம் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியும், அழகும் வெளிப்படும்.வாழ்த்துகிறார் காஞ்சிப்பெரியவர்