உள்ளூர் செய்திகள்

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

சிவ சம்போ!தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமி, ஐராவதம், காமதேனு, கற்பகமரம், சிந்தாமணி, கவுஸ்துப மணி என ஒவ்வொன்றாக வெளிப்பட்டன. மகாலட்சுமியை மகாவிஷ்ணு மனைவியாக ஏற்றார். மற்றவற்றை இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஏற்றனர்.இவற்றுடன் கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. அதைக் கண்டதும் தேவர்களும், முனிவர்களும் திகைத்தனர். அவர்களைக் காப்பாற்ற விஷத்தை சிவன் குடித்தார். பதறிய பார்வதி தடுக்கவே, சிவனின் கழுத்தில் விஷம் தங்கியது. அதனால் 'நீலகண்டன்' எனப் பெயர் பெற்றார். தொடர்ந்து பாற்கடலைக் கடைய அமிர்தம் கிடைத்தது. மகிழ்ச்சியில் தங்களைக் காப்பாற்றிய சிவனை மறந்தனர். பின்னர் தவறை உணர்ந்த அவர்கள் பிரதோஷ தினமான திரயோதசி திதியன்று (மாலை 4:30 - 6:00 மணிக்குள்) சிவனை வழிபட்டனர். மனமிரங்கிய அவரும் தன் வாகனமான நந்தியின் கொம்புகளுக்கு நடுவில் நின்று நடனமாடி தேவர்களுக்கு அருள்புரிந்தார். தவறு செய்தவர்களும், நன்றி மறந்து துரோகம் செய்தவர்களும் கூட பிரதோஷத்தன்று சிவபெருமானைச் சரணடைந்தால் நன்மை கிடைக்கும். பிரதோஷ வகைகள்* நித்ய பிரதோஷம்தினமும் மாலை 4:30 - 6:00 மணி நித்ய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் சிவனை தரிசிப்பது நல்லது. ஐந்து வருடம் தரிசிப்பவர்கள் சிவனருளால் பிறப்பற்ற நிலையை அடைவர்.* பட்சப் பிரதோஷம்அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறையில் 13வது திதியான திரயோதசி திதியன்று வருவது.* மாதப் பிரதோஷம்பவுர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறையில் 13வது திதியான திரயோதசி திதியன்று வருவது.* திவ்யப் பிரதோஷம் துவாதசியுடன் திரயோதசி சேர்ந்து வருவது அல்லது திரயோதசியுடன் சதுர்த்தசி சேர்ந்து வருவது திவ்யப் பிரதோஷம். இந்நாளில் சிவனை தரிசித்தால் முன் ஜென்ம பாவம் தீரும்.* தீபப் பிரதோஷம்பிரதோஷ நாளில் விளக்கு தானம் செய்வது. இந்நாளில் சிவன் கோயிலில் தீபங்களை ஏற்றினால் சொந்த வீடு அமையும். * சப்தரிஷி பிரதோஷம்ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனியில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே சப்தரிஷி மண்டலம். பிரதோஷ வழிபாடு முடித்தபின் சப்தரிஷிகளை நினைத்து வழிபட்டால் திருவருள், குருவருள் சேரும். * மகா பிரதோஷம்சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருவது மகா பிரதோஷம். சிவன் விஷம் அருந்திய நாளான இதில் சுயம்பு லிங்கத்தை வழிபடுவது சிறப்பு. * உத்தம மகா பிரதோஷம்சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை வளர்பிறையின் போது சனிக்கிழமையும், திரயோதசி திதியும் இணைவது உத்தம மகா பிரதோஷம். * ஏகாட்சர பிரதோஷம்வருடத்தில் ஒருமுறை மட்டுமே மகா பிரதோஷம் வரும். * அர்த்தநாரி பிரதோஷம்வருடத்தில் இரு முறை மகாபிரதோஷம் வருவது. இந்நாளில் சிவனை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். * திரிகரண பிரதோஷம்வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வருவது திரிகரண பிரதோஷம். இதை தரிசித்தால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும். * பிரம்ம பிரதோஷம்வருடத்தில் நான்கு முறை மகாபிரதோஷம் வருவது பிரம்ம பிரதோஷம். பிரம்மா தனக்கு ஏற்பட்ட சாபம் தீர திருவண்ணாமலையில் சிவதரிசனம் செய்ததால் இப்பெயர் வந்தது. முன்ஜென்மப் பாவத்தை இது போக்கும். * அட்சரப் பிரதோஷம்வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வருவது அட்சரப் பிரதோஷம். தாருகாவனத்தில் இருந்த ரிஷிகள் ஆணவத்தால் சிவனை எதிர்த்தனர். அதை அடக்க பிட்சாடனராகத் தோன்றி தக்க பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள் அட்சரப் பிரதோஷ விரதமிருந்து விமோசனம் பெற்றனர். * கந்தப் பிரதோஷம்சனிக்கிழமையில் திரயோதசி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவது கந்தப் பிரதோஷம். சூரனை வதம் செய்வதற்கு முன் முருகப்பெருமான் இந்நாளில் வழிபட்டதால் இப்பெயர் வந்தது. * சட்ஜ பிரபா பிரதோஷம் ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வருவது சட்ஜ பிரபா பிரதோஷம். வசுதேவர், தேவகி தம்பதிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எட்டாவது குழந்தையான கண்ணன் கருவில் இருக்கும் போது தேவகி இந்த விரதம் மேற்கொண்டாள். இதைக் கடைபிடித்தால் அழகான, அறிவு மிக்க குழந்தைகள் பிறப்பர். * அஷ்ட திக் பிரதோஷம் ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் வருவது அஷ்ட திக் பிரதோஷம். இதை தரிசித்தால் அஷ்டதிக்கு பாலகர்களின் அருளால் குறையாத செல்வம், புகழ் வரமாகக் கிடைக்கும். * நவகிரக பிரதோஷம் ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வருவது நவகிரக பிரதோஷம். அரிதான இதை அனுஷ்டித்தால் சகல சவுபாக்கியம் கிடைக்கும். * துத்த பிரதோஷம் ஒரு வருடத்தில் பத்து மகாபிரதோஷம் வருவது துத்த பிரதோஷம். இதை தரிசித்தவருக்கு சிவனின் திருவடியை அடையும் பேறு கிடைக்கும். 2020 - பிரதோஷ நாட்கள் (அடைப்புக் குறிக்குள் சனி மகாபிரதோஷம்)மார்ச் - (21)ஏப். - 5, 20மே - 5, 20ஜூன் - 3, 18ஜூலை - 2, (18)ஆக. - (1), 16, 30செப். - 15, 29அக். - 14, 28நவ. - 12, 27டிச. - (12), 27என்ன பலன்... பிரதோஷ எண்ணிக்கை - பலன்3 - மும்மூர்த்தியை தரிசித்த பலன் 5 - நோய் தீரும், உடல்நிலை சீராகும் 7 - திருமணத்தடை அகலும் 11 - உடல், மனம் பலம் பெறும்13 - தடை அகலும், விருப்பம் நிறைவேறும்21 - குழந்தைப் பேறு கிடைக்கும்33 - சிவாலய கும்பாபிஷேகம் செய்த பலன் 77 - ருத்ர யாகம் நடத்திய பலன் 108 - தேவேந்திர பூஜை செய்த பலன்121 - பிறப்பற்ற நிலை ஏற்படும்1008 - அஸ்வமேத யாக செய்த பலன்