உள்ளூர் செய்திகள்

பானகம் குடிக்கும் மங்களகிரி நரசிம்மர்

பானகம் குடிக்கும் நரசிம்மர் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகிலுள்ள மங்களகிரி மலையில் கோயில் கொண்டிருக்கிறார்.தல வரலாறு: நமுச்சி என்ற அசுரன், பிரம்மாவை வேண்டி ஈரமான அல்லது காய்ந்த பொருட்களால் தனக்கு அழிவு ஏற்படக் கூடாது என்று வரம் பெற்றான். இதன் காரணமாக ஆணவத்துடன் அலைந்தான். தேவர்களுக்கு தொல்லை கொடுத்தான். தேவர்களின் தலைவனான இந்திரன் விஷ்ணுவைச் சரணடையவே, அவர் சக்கராயுதத்தை ஏவினார். அது கடலில் மூழ்கி நுரையில் புரண்டு ஈரம் போலவும், காய்ந்தது போலவும் காட்சியளித்தது. அது சீறிப் பாய்ந்து அசுரனின் தலையை அறுத்துச் சென்றது. அவரது உக்கிர சக்தி மங்களகிரி மலையை அடைந்தது. அங்கு கோயில் கட்டப்பட்டது. ஆஞ்சநேயரின் வழிகாட்டுதலின்படி, ராமர் இந்த மலைக்கு வந்தார்.பானக பிரசாதம்: நரசிம்மரின் சிலை அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. பானகம் தயாரித்து, அதை நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றியதும், 'மடக் மடக்' என்னும் சப்தம் கேட்கும். குறிப்பிட்ட அளவு குடித்ததும், சத்தம் நின்று விடும். பின் பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். சில சமயத்தில் நரசிம்மரின் வாயில் இருந்தும் பானகம் வெளியே வரும். குகையில் ரங்கநாதர்: கோயிலின் பின்புறம் லட்சுமி தாயாருக்கு சன்னதி உள்ளது. நரசிம்மர் சன்னதிக்கு வெளியே உள்ள குகையில் விஷ்ணுவுக்கு சிலை இருக்கிறது. இங்கு 25 அடி நீள ரங்கநாதர் சிலை உள்ளது. பாதுகாப்பு கருதி குகை வாசல் மூடப்பட்டுள்ளது. இங்கு மலையடிவாரத்தில் லட்சுமி நரசிம்மருக்கு கோயில் உள்ளது. எப்படி செல்வது: குண்டூரிலிருந்து விஜயவாடா செல்லும் வழியில் 21 கி.மீ., விசேஷ நாட்கள்: நரசிம்ம ஜெயந்தி, பங்குனி உத்திரம்நேரம்: மலைக்கோயில்: காலை 6:00 - 2:00 மணிஅடிவாரக் கோயில்: காலை 6:00 - 12:30 மணி மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு : மலைக்கோயில்: 08645 - 233 174அடிவாரக் கோயில்: 08645 - 232 945அருகிலுள்ள தலம்: விஜயவாடா கனக துர்கா கோயில்