வீட்டுக்கு கொலு பார்க்க வருபவர்களுக்கு, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் மட்டும் தானா! கூடுதலா ஏதாச்சும் செய்து கொடுக்க நினைச்சிருப்பீங்க இல்லியா! இதோ! நவராத்திரி டிபன்! செஞ்சு பாருங்களேன்!தக்காளி பர்பி
தேவையானவை: தக்காளி - அரை கிலோசர்க்கரை - அரை கிலோதேங்காய் துருவியது - ஒரு மூடிஏலக்காய் பவுடர் - ஒரு டீ ஸ்பூன்
செய்முறை: தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோலுரித்து சற்று அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். தேங்காயை சிறிதளவு நெய்யில் வதக்கி எடுக்க வேண்டும். அது பொன்னிறமாக இருக்க வேண்டும். அடிப்புறம் அகலமான பாத்திரத்தில் தக்காளி விழுது, வதக்கிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். தீயை குறைவாக வைத்து விடாமல் கிளற வேண்டும். கலவை கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு வரும் பருவத்தில் இறக்கிவிட வேண்டும். அகலமான தட்டில் நெய் தடவி கலவையை கொட்டி சமமாக பரப்பி சிறிது ஆறியவுடன் சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டி எடுத்து விடவேண்டும். பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரியான பலகாரம் இது.
உருளைக்கிழங்கு அல்வா
தேவையானவை:உருளைக்கிழங்கு - கால் கிலோசர்க்கரை - கால் கிலோபால் - அரை லிட்டர்கிரீம் - 2 டீ ஸ்பூன்நெய் - 2 டீ ஸ்பூன்ஏலக்காய் பவுடர் - ஒரு டீ ஸ்பூன்தேங்காய் துண்டு - சிறிதளவுபாதாம்பருப்பு - சிறிதளவு வெள்ளரி விதை - சிறிதளவுமுந்திரி - சிறிதளவுகாய்ந்த திராட்சை - சிறிதளவு
செய்முறை: பாதாம், முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, தேங்காய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு நெய்யில் பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை அவித்து தொலி உரித்து மசித்துவிட வேண்டும். இந்த மசியலை வாணலியில் இட்டு நெய் ஊற்றி பொன்னிறமாக வதக்க வேண்டும். அதில் சர்க்கரை, பால் முதலியன சேர்த்து சிறிதளவு தீயில், விடாமல் கிளற வேண்டும். கலவை அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய், கிரீம் சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். வறுத்து வைத்துள்ள பாதாம், முந்திரி கலவையை இதன்மேல் தூவி பரிமாறலாம்.
மாம்பழ பர்பி
தேவையானவை:மாம்பழம் - ஒரு கிலோசர்க்கரை - தேவையான அளவுஏலக்காய் பவுடர் - ஒரு ஸ்பூன்நெய் - ஒரு டீ ஸ்பூன்பாதாம்பருப்பு - 25 கிராம்பிஸ்தா - 25 கிராம்சில்வர் பேப்பர் - தேவையான அளவு
செய்முறை: மாம்பழம் நன்றாக பழுத்ததாக இருக்க வேண்டும். இதை மிக்சியில் இட்டு சாறாக பிழிந்துகொள்ளவும். சாறு எவ்வளவு எடை இருக்கிறதோ, அதே அளவிற்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும். (இதற்கெல்லாம் தராசைத் தேட முடியுமா! ஒரு உத்தேசமா போடுங்க) அடிப்பகுதி அகலமாக இருக்கும் பாத்திரத்தில் மாம்பழ சாற்றை கொட்டி கொதிக்க வைக்கவேண்டும். தீ குறைந்த அளவே எரிய வேண்டும். சாறு கெட்டியானவுடன் நெய், பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து தொடர்ச்சியாகக் கிளற வேண்டும். கிளறுவதை நிறுத்தக்கூடாது. கலவை கெட்டியான பிறகு பாத்திரத்தில் ஒட்டாத அளவு இருக்கும் பருவத்தில் இறக்கிவிட வேண்டும். அகலமான ஒரு தட்டில் நெய் தடவி கலவையைக் கொட்டி சமமாக பரப்பி, அதன்மேல் சில்வர் பேப்பர் ஒட்டவேண்டும். சற்று ஆறிய பிறகு வேண்டிய வடிவத்தில் துண்டுகளாக வெட்டி எடுத்துவிடலாம்.