புதிய சக்கரம்; புதிய சக்தி
ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏதாவது ஒரு லட்சுமியைத் தேடி செல்வது வழக்கம். இப்படி அலைவதை விட, ஒரே இடத்தில் பல லட்சுமி இருந்தால்...!கிளம்புங்கள் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகிலுள்ள சவுந்தர்யபுரத்திற்கு. தேவர்களுக்கு முதல்வனான ஆதிகேசவப் பெருமாள் அம்புஜவல்லித்தாயாருடன் மூலவராக காட்சி தருகிறார். வழக்கமாக பெருமாளின் கையில் சுதர்சன சக்கரத்தை பார்த்திருப்போம். ஆனால் இங்கோ ஸ்ரீபத்மசக்கரத்தை தரிசிக்கலாம். இது சக்கரம் மட்டுமல்ல; இதிலுள்ள சங்கதியும் புதிது... சக்தியும் புதிது!ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தனலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமிகள் இந்த பத்மசக்கரத்தில் உள்ளனர். அஷ்டலட்சுமி தரிசனம் கிடைத்து விட்டதே என அரக்க பரக்க கிளம்ப வேண்டாம். ஆண்டாள், நம்மாழ்வார், சுதர்சனர், ராமானுஜர் சன்னதிகளோடு, மறக்காமல் சுந்தர வரத ஆஞ்சநேயரையும் தரிசியுங்கள். ஒருமுறை இங்குள்ள சிலைகள் காணாமல் போக, இவரை பிரதிஷ்டை செய்ததும் தொலைந்த சிலைகள் கிடைத்தன. எனவே தொலைந்தது கிடைக்க இவரிடம் மனதை தொலைத்து விட்டு வாருங்கள்! செல்வது எப்படி* காஞ்சிபுரத்தில் இருந்து 33 கி.மீ., * வந்தவாசியில் இருந்து 13 கி.மீ.,விசேஷ நாட்கள்: பவுர்ணமியன்று மகாலட்சுமிக்கு அபிஷேகம்நேரம்: காலை 9:00 - 10:00 மணி; பவுர்ணமியன்று மட்டும் காலை 9:00 - 2:00 மணிதொடர்புக்கு: 98941 91094, 044- - 2723 0819அருகிலுள்ள தலம்: 5 கி.மீ., தொலைவில் தென்னாங்கூர் பாண்டுரங்கர் கோயில்- செ.சீதாலட்சுமி, மயிலாடுதுறை