உள்ளூர் செய்திகள்

உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்

* உயிர்களிடம் இரக்கமுடன் நடந்தால் தான், கடவுளின் அருளைப் பெற முடியும்.* செய்கின்ற எல்லா செயல்களிலும் பொதுநலனும் இருப்பது அவசியம். * உலகிலுள்ள எல்லாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். * வழிபாட்டைக் கூட தனக்கென இல்லாமல் பிறருக்காகச் செய்ய வேண்டும். * உடலுக்கு உயிர் ஒன்று போல இந்த உலகுக்கு கடவுள் ஒருவரே. * தெய்வங்களின் பெயரைச் சொல்லி மிருகங்களை பலியிடக் கூடாது. * மாமிசம் உண்பவர்களைப் பார்த்தால் மனதில் கலக்கம் ஏற்படுகிறது. * கடவுளின் திருவடிகளை ஒருமித்த மனதுடன் வணங்குங்கள். * உள்ளொன்றும், வெளியே ஒன்றுமாக இருப்பவர்களிடம் பேசாதீர்கள்.* இன்றைய உலகம் சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டதாக இருக்கிறது. * எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் கருதுபவனே உண்மையான மனிதன். * யார் துன்புறுத்தினாலும் அஞ்சாமல் இருப்பவனே வீரன்.* விவேகத்துடன் பிறர் குற்றத்தை மன்னிப்பவனே ஆண் மகன். * அடியவர்களின் குற்றத்தையும் குணமாக கடவுள் ஏற்றுக் கொள்கிறார்.வழிகாட்டுகிறார் வள்ளலார்