தாயிற் சிறந்த கோயிலுமில்லை
* தாயே கண் கண்ட தெய்வம். அவரை விடச் சிறந்த கோயில் வேறில்லை. * வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் கற்கும் கல்வி வேர் போன்றது.* ஒழுக்கம் உடையவன் முகத்தில் அழகு தெய்வம் குடியிருக்கும்.* கடவுள் நம்பிக்கை இல்லாதவன் விலங்கு நிலைக்கு தள்ளப்படுவான்.* யாரிடமும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது. * எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.* கற்பே ஆபரணம். அதைக் காப்பது பெண்களின் கடமை.* பணத்திற்காக பிறரைத் துன்புறுத்தி வேலை வாங்குவது கூடாது.* கடவுள் அளித்த அரிய கொடை உடல். அதை நல்வழியில் பயன்படுத்துங்கள். * மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி. * நம்மிடம் உள்ள தெய்வீக சக்தியை உணர்வதே வாழ்வின் பயன். * மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் சேவை. * நோயில்லாத மக்கள் வாழும் நாடே சிறந்த நாடு. * அறிவுரை சொல்பவன் தன் குறைகளை முதலில் போக்க வேண்டும்.* ஒழுக்கமுடன் வாழ்பவன் கடவுளின் கட்டளைப்படி வாழ்கிறான். * அன்பு, தியாக குணத்தால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.போற்றுகிறார் திரு.வி.க.,