இரண்டடுக்கு முருகன் கோயில்
மலையில் இருக்கும் முருகனைத் தரிசித்திருப்போம்! கோயில் ஒன்று படியிறங்கி தரிசிக்கும் விதத்தில், திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணியில் உள்ளது. இக்கோயில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது. இப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர் ஒருவர் வேட்டைக்குச் சென்றார். ஓரிடத்தில் சுனை நீரைக் குடித்து உறங்கினார். அப்போது கனவில் தோன்றிய முருகன், சுனைக்கு அருகில் கோயில் கட்ட உத்தரவிட்டார். அதன்படி இங்கு கோயில் கட்டப்பட்டது.காலப்போக்கில் கோயில் சிதிலமடைந்தது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார் திருப்பணி செய்ய ஏற்பாடு செய்தார். முருகன் சிலையில் குறை இருந்ததால், புதிய சிலை வடிவமைக்கப்பட்டது. ஆனால் சிலையை அகற்ற முடியாததால் பழைய கோயில் இரண்டு அடுக்காகக் கட்டப்பட்டது. ஆதி முருகன் என்னும் பழைய முருகன் சிலை கீழ்ப்பகுதியில் இருக்க, புதிய சிலை மேல் அடுக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலடுக்கில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம், கீழடுக்கில் உள்ள முருகன் மீது விழும் விதத்தில் சன்னதி உள்ளது. மூலவர் முருகன் குழந்தை வடிவில் கையில் தண்டம் ஏந்தி ராஜ அலங்காரத்தில் இருக்கிறார். குழந்தை இல்லாதவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து சந்தனக்காப்பு நேர்த்திக்கடன் செய்கின்றனர். முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளன. பிரகாரத்தில் சக்தி விநாயகர் உள்ளார்.எப்படி செல்வது: திண்டுக்கல்லில் இருந்து 23 கி.மீ., விசஷே நாட்கள்: பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக்கார்த்திகை, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை நேரம்: காலை 6:00 - 1:00 மணி; பகல் 2:00 - 6:00 மணிதொடர்புக்கு: 96268 21366, 0451 - 205 0260அருகிலுள்ள தலம்:திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் 23 கி.மீ.,