என்ன அழகு... எத்தனை அழகு!
* அளவோடு உண்கிற பெண்களுக்கு அழகு நீடிக்கும்.* துன்பம் வரும் போதும் மனம் தளராமல் ஊக்கத்துடன் செயல்பட்டால் வெல்வது உறுதி. துணிவு இருந்தால் கடலின் ஆழம் கூட தொடை அளவே. * தாயும் தந்தையும் தான் நமக்கு முதல் கடவுள்.* இல்லற வாழ்வே நல்லறமாகும். இல்லற வாழ்வை விட்டு விலகுவது பண்பாளர்களுக்கு ஏற்றதல்ல.* பிறருக்கு கொடுத்து வாழாதவர் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அது அர்த்தமற்றதாகும்.* பெற்றோரின் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் அமிர்தம் போன்றவர்கள்.* பிச்சை எடுக்கும் அளவிற்கு வறுமை வந்தாலும், தவறான செயல்களில் ஈடுபட கூடாது.* வேதம், ஞான நுால்களை படித்து விட்டு ஒழுக்கமில்லாமல் இருப்பவர்கள் பூமிக்கு பாரமானவர்கள்.* நம்மை அழிக்கும் நோய் வெளியில் இல்லை, அது பொறாமை என்னும் பெயரில் நமக்குள்ளேயே இருக்கிறது.* நல்ல சொற்களை மட்டுமே கேட்டு, நல்ல சொற்களை மட்டும் பேசி வாழ்வதே கற்பு.* முயற்சி செய்தும் தனக்கு கிடைக்காத பொருளை உடனே மறந்து விட வேண்டும்.* குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பவர்களுக்கு நண்பர், உறவினர்களின் ஆதரவு கிடைக்காது.* எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், தற்பெருமை பேசுதல் கூடாது. அது திறமையை அழித்துவிடும்.* காற்றுடன் தீ சேர்ந்தால் அழிவு அதிகமாகும். அதுபோல கோள் சொல்பவனுடன் அதைக் கேட்பவனும் சேர்ந்தால் தீமை அதிகமாகும்.* இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாது இருப்பதே உண்மையான உறவுக்கு அடித்தளம்.* சூதாடுவதும், தேவையில்லாத வாக்குவாதமும் தீராத துன்பத்தை தரும்.* கட்டிய கணவனையே பழிதுாற்றும் பெண் எமனுக்கு நிகராவாள்.* பிறர்க்கு அடிமையாய் இருந்து உண்பதை விட உழைத்து உண்பதே சிறந்தது.* நீரின்றி அமையாது உலகு என்பதால் நீர்வளம் உள்ள ஊரில் வாழ்தலே சிறப்பு.* மிகச்சிறிய செயலாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து செய்வதே நல்லது.* மனசாட்சியை புறக்கணிப்பதை விட பெரிய வஞ்சகம் வேறு ஒன்றுமில்லை. * உருவத்தால் சிறியவர் என்று யாரையும் ஏளனமாக கருத கூடாது. * அமிர்தமாகவே இருந்தாலும் பசித்த பின் உண்பது நல்லது.* சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் உலகம் உங்கள் கையில்.* நன்மையோ, தீமையோ செயலின் விளைவு கட்டாயம் கிடைத்தே தீரும்.* உழவுத்தொழிலின் மூலம் கிடைத்த செல்வம் என்றும் நிலைத்திருக்கும்.* நாவடக்கத்துடன் அமைதி காப்பதே தவவாழ்வின் அடையாளம்.* துாய வெள்ளை மனம் படைத்தவருக்கு தீய சிந்தனைகள் உண்டாவதில்லை.பெண்களுக்கு அவ்வையார் 'டிப்ஸ்'