புராணம் என்றால் என்ன
* ஆன்மிக தத்துவத்தை எளிமையாக புரிய வைப்பதே புராணத்தின் நோக்கம். * நாம் செய்யும் நல்வினைகள் நம்மை நல்வழிப்படுத்தும். * பண்புள்ளவர்கள் எங்கு இருந்தாலும் அமைதிக்கு வழிவகுப்பர். * மனம் என்னும் வீட்டில் இருந்தே கடவுள் நம்மை இயக்குகிறார். * எல்லா உயிர்களிடமும் கடவுளைக் காண்பதே உண்மை பக்தி. * தினமும் செய்ய வேண்டிய அவசியக் கடமை தியானம். * தியானத்தால் மனம் பக்குவம் பெறும். வாழ்க்கை சீராகும். * வாழ்வில் நாம் எதை சந்திக்கப் போகிறோம் என்பதை மாற்ற முடியாது. அதுவே விதி. * மனத் துாய்மையுடன் சிறுபூவை கொடுத்தாலும் கடவுள் ஏற்பார். * பண்பு இல்லாதவன் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்காது. * கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கடவுளின் அருளால் உலகம் இயங்குகிறது. * மனிதன் செய்யும் சமூகத் தொண்டுகள் அளவில் சிறியவை. * உலக நன்மைக்காக ஞானிகள் செய்யும் பிரார்த்தனை பலத்தில் பெரியவை. * உண்மை, நேர்மை மிக்கவர்கள் வாழ்வில் உயர்வர்.* வாழ்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது அவரவர் கையில் உள்ளது. விளக்குகிறார் சின்மயானந்தர்