உள்ளூர் செய்திகள்

கவலை தீர்க்கும் நவ கன்னியர்!

கும்பகோணம் மகாமக குளக்கரையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள நவ கன்னியரை வழிபட்டால் கவலை தீர்ந்து உடனடியாக தீர்வு கிடைக்கும். தல வரலாறு: ராவண வதம் செய்யும் முன், ராமர் தனது இயல்பான குணம் மாறி ருத்ராம்சம் பெற அகத்திய முனிவரை வேண்டினார். கும்பகோணத்தில் சில நாள் தங்கியிருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என யோசனை தெரிவித்தார். ராமனும் இங்கு தங்கி ருத்ராம்சம் பெற்றார்.நவகன்னியர்: நவ கன்னியரான கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகியோர் தங்களிடம் மக்கள் தொலைத்த பாவம் தீர சிவனை வணங்கினர். கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடும்படி சிவன் கூறினார். அவ்வாறே புனித நீராடி கரையிலுள்ள காசி விஸ்வநாதரை தரிசித்து பலன் பெற்றனர். நதிகளான நவ கன்னியருக்கு சிலைகள் உள்ளன.12 வெள்ளி வழிபாடு: 12 வெள்ளிக்கிழமை விரதமிருந்து நவ கன்னியரை வழிபட்டால் கவலை நீங்கி தீர்வு கிடைக்கும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். இங்குள்ள ஷேத்திரலிங்கம் அதிக உயரம் கொண்டது. சண்டிகேஸ்வரரின் எதிரில் துர்க்கை இருப்பது மாறுபட்ட அம்சம். இவர்களைத் தவிர சப்தமாதர், பைரவர், சூரியன், சந்திரன், ஜேஷ்டாதேவி, லிங்கோத் பவர், ஆஞ்சநேயர், மகிஷாசுரமர்த்தினி, தட்சிணாமூர்த்தி ஆகியோரும் உள்ளனர். நவ கன்னியரின் பாவம் போக்கிய சிவன் 'காசி விஸ்வநாதர்' என்றும், அம்பாள் 'விசாலாட்சி' என்றும் அழைக்கப்படுகின்றனர்.எப்படி செல்வது: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் 39 கி.மீ.,விசஷே நாட்கள்: மாசி மகத்தை ஒட்டி பத்து நாள் திருவிழாநேரம்: காலை 6:00 - 12:30, மாலை 4:00 - 8:00தொடர்புக்கு: 0435 - 240 0658அருகிலுள்ள தலம்: கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்