உள்ளூர் செய்திகள்

காசிக்குப் போகும் இளைஞர்களே இதைக்கேளுங்கள்!

'காசிக்கு இணையான தலமில்லை. கங்கைக்கு இணையான தீர்த்தமில்லை' என்பது சொல் வழக்கு. வாழ்நாளில் ஒருமுறையாவது கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பக்தரும் விரும்புகிறார்கள். 'கடந்த பிறவிகளில் என்னால் கங்கையைத் தரிசிக்க முடிய வில்லையே' என்று முற்பிறவியில் வருத்தப்பட்ட ஒருவருக்கே, இப்பிறவியில் கங்கை தரிசனம் கிடைக்கும் என்கிறது 'கங்கா மகாத்மியம்' என்ற நூல். காசி செல்லும் இளைஞர்கள் கடைபிடிக்க விதிமுறைகள் உள்ளன.* உங்கள் பெற்றோரில் தாயோ, தந்தையோ இதுவரை காசியாத்திரை செல்லாமல், பிள்ளைகள் மட்டும் தனித்து செல்வதால் பயனில்லை.* இளைய வயதினரான ஆண், பெண் யார் காசி சென்றாலும் அவரவர் பெற்றோரை அழைத்துச் செல்வது அவசியம். அதேநேரம், பெற்றோர் ஏற்கனவே காசியாத்திரை சென்றிருந்தால் அவர்களை உடன் அழைத்துச் செல்லத் தேவையில்லை. * கங்கைக் கரையில் புனித நீரால் பெற்றோருக்குப் பாதபூஜை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், வாழ்நாள் முடிந்ததும், இந்திரனே நேரில் வந்து தேவலோகத்திற்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.