உள்ளூர் செய்திகள்

2017 - இந்தியாவில் என்ன நடக்கும்?

* மக்கள் மத்தியில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். கோவில்களில் அதிக வசதி செய்யப்படும்.* ரூபாயின் மதிப்பு உயரும். மக்கள் வரிப்பணத்தை சரிவரச் செலுத்தி வளர்ச்சிக்குத் துணை நிற்பர். அரசு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும்.* கல்வித்தரம் உலக நாடுகளுக்கு இணையாக வளரும். பண்பாடு, கலாசாரத்தின் முக்கியத்துவம் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும்.* ராணுவத்தை பலப்படுத்தும் விதத்தில் நவீன ஏவுகணை, போர் விமானங்கள் வாங்கப்படும். தீவிரவாதம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும்.* மழை வளத்தால் உணவு உற்பத்தி பெருகும். உரம், பூச்சிகொல்லி மருந்து விலை குறையும். விளைச்சல் அதிகரிப்பால் விலைவாசி குறையும்.* அந்நிய நாடுகளின் முதலீடு அதிகரிக்கும். பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்படும். தொழில் வளர்ச்சி பெருகும்.* தங்கம், வைரம், வெள்ளி, மனை, வீடு ஆகியவற்றின் விலை குறையும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை சற்று அதிகரிக்கும்.* கடல் சீற்றத்தால் கடலோரப்பகுதிகளில் உயிர், பொருள் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.