27 ஆண்டுகள் பேசாமலே இருந்தவர்
UPDATED : ஜன 27, 2017 | ADDED : ஜன 27, 2017
27 ஆண்டுகள் தொடர்ந்து மவுனவிரதம் மேற்கொண்டார் மகான், திருப்போரூர் மவுனகுருசுவாமி. சிங்கார வேலன் என்பது இவரின் இயற்பெயர். 15 ஆண்டு குழந்தைப்பேறு இல்லாமல் வருந்திய இவரது பெற்றோருக்கு, சென்னை அருகிலுள்ள திருப்போரூர் முருகன் அருளால் 1878ல் பிறந்தார். இரண்டு ஆண்டுகள் இல்லற வாழ்வில் ஈடுபட்டார். பின் துறவியானார். தன் குருநாதரின் உத்தரவுப்படி 27 ஆண்டுகள் மவுன விரதம் மேற்கொண்டார். தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தை மூன்று மாதத்திற்கு முன்னரே அறிவித்த இவர், 1926 ஜன.30ல் முக்தி அடைந்தார். இவரது மடம் திருப்போரூர் கண்ணுவார் பேட்டையில் உள்ளது. சிதிலமடைந்த இந்த மடத்தின் திருப்பணி நடக்க உள்ளது. ஜன.30ல் 91வது ஆண்டு குருபூஜை விழா நடக்கிறது. அலைபேசி: 96263 57589.