ஆறுகால அபிஷேகம்
UPDATED : ஏப் 29, 2022 | ADDED : ஏப் 29, 2022
பூமியில் ஓர் ஆண்டு என்பது வானுலக தேவர்களுக்கு ஒரு நாளாகும். ஒரு நாளில் கோயில்களில் ஆறு கால பூஜை நடப்பது போல ஓராண்டிற்கு ஆறுகால பூஜைகளை நடராஜருக்கு தேவர்கள் நடத்துகின்றனர். அவையாவனசித்திரை - திருவோணம் உச்சிக்காலம் ஆனி - உத்திரம் பிரதோஷ காலம் ஆவணி - வளர்பிறை சதுர்த்தசி மாலைச்சந்தி புரட்டாசி - வளர்பிறை சதுர்த்தசி அர்த்தஜாமம் மார்கழி - திருவாதிரை திருவனந்தல் மாசி - வளர்பிறை சதுர்த்தசி காலைச்சந்தி இந்த நாட்களில் நடராஜருடன் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், வியாக்ர பாதர், பதஞ்சலி, சிவகாமியம்மனுக்கும் அபிஷேகம் நடக்கும்.