அம்மனுக்கு ஆறுமாதம்
                              UPDATED : ஜூலை 15, 2012 | ADDED : ஜூலை 15, 2012 
                            
                          
ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்வதை 'தட்சிணாயன காலம்' என்பர். 'தட்சிணம்' என்றால் 'தெற்கு'. (இதனால் தான் தெற்குமுக கடவுளை தட்சிணாமூர்த்தி என்றும், தென்னக ரயில்வேயை 'தட்சிண ரயில்வே' என்றும் சொல்வர்) இந்த ஆறுமாதமும் தேவலோகத்தில் இரவாக இருக்கும். இந்த மாதங்களில் பூலோகத்திலும் இரவுநேரம் கூடுதலாக இருக்கும். பகல் பொழுதைக் குறிக்கும் தை முதல் ஆனி வரையான உத்ராயணத்தில் சிவனையும், இரவுப்பொழுதைக் குறிக்கும் தட்சிணாயனத்தில் அம்பிகையையும் வழிபடுவர். இதன் அடிப்படையில் ஆடியில் மாரியம்மன் வழிபாடு, புரட்டாசியில் நவராத்திரி, மார்கழி பாவைநோன்பு ஆகியவை நடக்கிறது.பாவை நோன்பு கார்த்தியாயினி தேவிக்குரிய விரதமாக அக்காலத்தில் இருந்தது. ஆண்டாள், மாணிக்கவாசகர் காலத்திற்குப்பின் திருப்பாவை, திருவெம்பாவை நோன்பாக மாறி விட்டது.