உள்ளூர் செய்திகள்

நோயின்றி...

ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி, அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்கு கலந்து விளக்கு போல செய்து ஏற்றி வைப்பர். அதை அம்மனாக கருதி வணங்குவர். மாரி, காளி, துர்கை போன்ற தெய்வங்களுக்கு இதைச் செய்தால் நோயின்றி நீண்டநாள் வாழலாம்.