சோழர் காலத்தில்...
UPDATED : ஆக 02, 2024 | ADDED : ஆக 02, 2024
ஆடிப்பெருக்கு நாளில் சோழநாடு எங்கும் குளம், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்நாளில் தென்னங்குருத்தால் ஆன மரச் சப்பரங்களை இழுத்துக் கொண்டு மக்கள் காவிரிக்கரை நோக்கிச் சென்றனர். அனைவரும் புத்தாடை அணிந்திருந்தனர். தாழம்பூ, செவ்வந்தி, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பக பூக்கள் பெண்களின் கூந்தலை அலங்கரித்தது. கூட்டாஞ்சோறு, சித்திரான்னங்களை வைத்துக் கொண்டு ஆற்றங்கரையில் வட்டமாக அமர்ந்தனர். கமுகு மட்டைகளில் உணவு, காய்கறிகளை பரிமாறினர். சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கண்வாய்களில் எறிந்து அவை வெளியே ஓடி வருவதைக் கண்ட சிறுவர்கள் கைகொட்டிச் சிரித்தனர். ஓடப்பாட்டு, வெள்ளப் பாட்டு, கும்மிப்பாட்டு, சிந்து பாடல்களை பெண்கள் பாடினர்.