சுந்தர காண்டம்
UPDATED : ஆக 09, 2024 | ADDED : ஆக 09, 2024
இதிகாசமான ராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது. இதிலுள்ள சுந்தர காண்டம் முக்கியமானது. சுந்தரம் என்றால் 'அழகு'. அழகான நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பகுதி இது. சீதையின் பிரிவால் வாடிய ராமருக்கு 'கண்டேன் சீதையை' என நல்ல செய்தி சொன்னவர் அனுமன். அதைப் போல் அசோகவனத்தில் துன்பப்பட்ட சீதைக்கு ' தாயே... உன் கணவர் ராமர் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கிறார்' என தகவல் சொன்னவரும் அனுமனே. அவரின் புகழ் பாடும் பகுதியான சுந்தரகாண்டத்தை படித்தால் கிரகதோஷம் அகலும். பிரச்னை தீரும். 108 தடவை காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால் அடையும் பலனை, சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் (68 அத்தியாயம்) படித்தால் கிடைக்கும்.