உள்ளூர் செய்திகள்

ஹரிபலம்

திருமாலின் அம்சமாக நெல்லி மரம் கருதப்படுவதால் 'ஹரிபலம்' எனப்படுகிறது. வீட்டில் நெல்லி மரம் நட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். நெல்லிக்கனியை உணவில் சேர்த்தால் ஆரோக்கியம், புண்ணியம் சேரும். நெல்லி மர நிழலில் அன்னதானம் செய்தால் பன்மடங்கு புண்ணியம் சேரும். ஏகாதசியன்று விரதமிருக்கும் திருமால் பக்தர்கள் மறுநாளான துவாதசி யன்று நெல்லிக்காயை உணவில் சேர்க்கின்றனர்.