பட்டாபிஷேகம்
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
இந்திரனுக்கு ஒருமுறை கர்வம் உண்டானது. தன்னால் தான் ஆயர்களும், பசுக்களும் வளமுடன் வாழ்கிறார்கள் எனக் கருதினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த கிருஷ்ணர். ''இனி இந்திரனை கைவிட்டு நம் வாழ்வுக்கு ஆதாரமான கோவர்த்தன மலையை வழிபடுவோம்'' என்றார். இதையறிந்த இந்திரன் ஏழுநாள் மழை பெய்யச் செய்தான். பசுக்களையும், ஆயர்களையும் காக்க கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார் கிருஷ்ணர். கர்வம் அடங்கிய இந்திரன், தவறை உணர்ந்து கிருஷ்ணருக்குப் பட்டாபிஷேகம் நடத்தினான். இதன்பின் கிருஷ்ணருக்கு 'கோவிந்த ராஜன்' என பெயர் வந்தது.