உள்ளூர் செய்திகள்

வெற்றிக்கு...

வெற்றிக்கு செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அச்சுமுறி விநாயகரை வணங்குங்கள். தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய அசுரர்கள் தேவர்களை துன்புறுத்தினர். அவர்களை அழிக்க சிவன் தேரில் புறப்பட்டார். ஓரிடத்தில் தேரின் அச்சு முறிந்தது. விநாயகரை வணங்காமல் வந்ததால்தான் இப்படி ஆனது என்பதை சிவன் உணர்ந்து மன்னிப்பு கேட்க தேரின் அச்சு சரியானது. தேரின் அச்சு முறிந்ததால் இத்தலம் 'அச்சிறுப்பாக்கம்' என்றானது. இவரை வணங்கினால் எப்போதும் வெற்றிதான். எப்படி செல்வது: செங்கல்பட்டில் இருந்து மேல்மருவத்துார் செல்லும் சாலை வழியில் 39கி.மீ., நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 98423 09534