விருப்பம் நிறைவேற...
UPDATED : செப் 05, 2024 | ADDED : செப் 05, 2024
துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகருக்கு தேங்காய் உடைப்பதாக நேர்ந்து கொள்ளுங்கள். விருப்பம் நிறைவேறும். ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து மன்னர் கோமார வல்லபன் யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால் அதற்கு 999 அந்தணர்கள் வந்தனர். ஒருவர் குறைந்த நிலையில் பண்டிதர் வடிவில் விநாயகர் அதில் பங்கேற்றார். யாகம் முடிந்ததும் இங்கேயே தங்கி விட்டார். ஆயிரத்தெண் விநாயகர் என்னும் பெயரில் இங்கு இருக்கிறார். வழக்கில் இருந்து விடுபட வேண்டியும் 108 தேங்காய் உடைக்கின்றனர்.எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ., துாரத்தில் ஏரல். அங்கிருந்து 7 கி.மீ., நேரம்: காலை 7:00 - 12:30 மணி; மாலை 4:00 -- 8:00 மணி தொடர்புக்கு: 93619 10133