உள்ளூர் செய்திகள்

எப்போதும் வெற்றிக்கு...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகரை வழிபட்டால் எப்போதும் வெற்றிதான். மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தை உருவாக்கிய போது கிடைத்தவர் முக்குறுணி விநாயகர். முக்குறுணி என்றால் 12 படி. இவருக்கு நைவேத்யம் செய்யப்படும் கொழுக்கட்டை 12 படி அரிசி மாவால் செய்யப்படுவதால் 'முக்குறுணி விநாயகர்' எனப்படுகிறார். விநாயகரின் அறுபடை வீடுகளில் இது நான்காம் படைவீடு. எப்படி செல்வது: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 1 கி.மீ., நேரம்: அதிகாலை 5:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி தொடர்புக்கு: 0452 - 234 4360