உள்ளூர் செய்திகள்

புகழுடன் வாழ...

காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் சங்குபாணி விநாயகரை வழிபட்டால் புகழுடன் வாழலாம். பிரம்மாவிடம் இருந்து வேதங்களை சங்காசுரன் என்னும் அசுரன் திருடினான். அவர் சிவனிடம் முறையிட விநாயகரை அனுப்பி வைத்தார். அசுரனைக் கொன்று வேதத்தை மீட்டதோடு அவனைச் சங்காக மாற்றி தன் கையில் தாங்கினார். இதனால் சங்குபாணி விநாயகர் எனப் பெயர் பெற்றார். யாத்திரையாக காஞ்சிபுரத்தில் இருந்து காஞ்சி மஹாபெரியவர் புறப்படும் சமயத்தில் சங்குபாணி விநாயகருக்கு 108 தேங்காய்கள் (சிதறுகாய்) உடைப்பார். எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி தொடர்புக்கு: 97900 02008