நன்மை பெருக...
UPDATED : செப் 05, 2024 | ADDED : செப் 05, 2024
தீமை விலகி நன்மை பெருக வேண்டுமா... நீலகிரி மாவட்டம் ஊட்டி இரட்டை விநாயகருக்கு சிதறு தேங்காய் உடையுங்கள். தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா... ஒருமுறை சிவபெருமானிடம், ''உங்கள் தலையை எனக்குப் பலி கொடுங்கள்'' எனக் கேட்டார் விநாயகர். இதற்காக தன்னைப் போல் மூன்று கண்கள் கொண்ட தேங்காயை உண்டாக்கி சிதறு தேங்காயாக அர்ப்பணித்தார் சிவன். ஆணவம் என்னும் ஓட்டை உடைத்தால் அருள் என்னும் இளநீர் வெளிப்படும் என்பதே இதன் தத்துவம். இரட்டை விநாயகருக்கு சதுர்த்தியன்று தேங்காய் மாலை சாத்தினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். எப்படி செல்வது: ஊட்டியில் இருந்து 1 கி.மீ., நேரம்: காலை 7:00 - 10:00 மணி; மாலை 4:00 - 7:00 மணிதொடர்புக்கு: 94420 84539