பிறவிப்பயன்
UPDATED : செப் 23, 2024 | ADDED : செப் 23, 2024
மகாவிஷ்ணுவை முழுமுதல் கடவுளாக வழிபடுபவர்கள் பயன்படுத்தும் சொல் அர்த்த பஞ்சகம். இதன் பொருள் ஐந்து நிலைகள். அவை கடவுள் நிலை அதாவது மகாவிஷ்ணு, உயிர்நிலை (ஜீவர்கள்), கடவுளை அடையும் வழி (உபாய நிலை), அதற்கு தடையாக இருப்பவை (பகை நிலை), கடவுளை அடைந்தபின் அனுபவிக்கும் பயன் (உபயோக நிலை). இந்த ஐந்தைப் பற்றி சிந்தித்து மகாவிஷ்ணுவின் திருவடியை அடைவதே பிறவிப்பயன்.