கடனாளி
UPDATED : செப் 23, 2024 | ADDED : செப் 23, 2024
கல்யாணத்திற்காக குபேரனிடம் பதினான்கு லட்சம் தங்க நாணயங்களைக் கடனாக வாங்கியதால் ஏழுமலையான் 'பெரிய கடனாளி' ஆனார். இதற்கான கடன் பத்திரத்தை குபேரனுக்கு சுயமாக எழுதியும் கொடுத்தார். இதில் பிரம்மா, சிவன், அரச மரத்தின் அபிமான தேவதை ஆகிய மூவரும் சாட்சியாக கையெழுத்திட்டனர். இந்த கடன் மட்டுமில்லாமல் இன்னொரு கடனும் ஏழுமலையானுக்கு தினமும் ஏறிக் கொண்டேயிருக்கிறது. கோவிந்தா என்ற திருநாமத்தை ஒருமுறை சொன்னால் கூட போதும். உடனே அந்த பக்தரிடம் ஏழுமலையான் கடன்பட்டவராக ஆகி விடுகிறார். ஒவ்வொரு நாளும் திருமலை எங்கும் கோவிந்தா நாமம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இதனால் ஏழுமலையான் பெரிய கடனாளியாக ஆகி கொண்டிருக்கிறார்.