மணக்கோல மகாலட்சுமி
UPDATED : அக் 17, 2024 | ADDED : அக் 17, 2024
பாற்கடலில் அவதரித்தவள் மகாலட்சுமி. கடலில் தோன்றியதால் 'அலைமகள்' எனப் பெயர் பெற்றாள். சென்னை திருவான்மியூர் பெசன்ட்நகரில் புகழ் பெற்ற அஷ்டலட்சுமி கோயில் உள்ளது. ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி ஆகிய எட்டு லட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். நடுவில் லட்சுமி நாராயணர் அருள்புரிகிறார். கடலோசை எழுப்பும் ஓங்கார மந்திரத்தில் மனம் லயித்தபடி பெருமாளும், மகாலட்சுமியும் மணக்கோலத்தில் உள்ளனர்.