ஆறு நாள் விழா
UPDATED : அக் 29, 2024 | ADDED : அக் 29, 2024
திருச்செந்துாரில் சஷ்டி விழாவில் முதல்நாளன்று ஹோம மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருள்வார். அறுகோண வடிவ ஹோம குண்டத்தை சுற்றிலும் விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, அஷ்டதிக் பாலகர்கள், துவாரபாலகர்கள் என எல்லா தெய்வங்களையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலத்தில் பூஜை முடிந்ததும் தினமும் சண்முகவிலாச மண்டபத்திற்கு முருகன் செல்வார். ஆறாம் நாளான கந்தசஷ்டியன்று கடற்கரைக்கு எழுந்தருள சூரசம்ஹாரம் நடக்கும். அப்போது மாமரமாக நின்ற சூரனை மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஏற்றுக் கொள்வார்.