உள்ளூர் செய்திகள்

தொலைந்த பொருள் கிடைக்க...

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகிலுள்ள தலம் தேரெழுந்துார். இங்கு உள்ள தேவராஜப் பெருமாள் கோயில் கருவறையில் பெருமாள், தாயார், காவேரித்தாய், பக்த பிரகலாதன், கருட பகவான் ஆகியோர் காட்சி தருகின்றனர். இப்படி அனைவரும் காட்சி தரும் ஒரே திவ்ய தேசம் இதுவாகும். திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றது. இவ்வூரில் தான் புலவரான கம்பர் பிறந்தார். அதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இக்கோயிலில் சன்னதி உள்ளது. தொலைந்த பொருள் கிடைக்கவும், வரம்பு மீறுபவர்கள் அடங்கிடவும், திருமணத்தடை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.