உள்ளூர் செய்திகள்

வச்ச குறி தப்பாது

'குருவிக்கு தக்கது ராமேஸ்வரம்' என பழமொழி எப்படி வந்தது தெரியுமா... போர்க்களத்தில் கூட ஆயுதம் இல்லாமல் நின்ற ராவணனைக் கொல்லாமல் 'இன்று போய் நாளை வா' என எதிரியிடம் இரக்கம் காட்டியவர் ராமர். சத்தியம், தர்மத்தின் அடையாளமான அவரின் அம்புக்கு தப்பியவர் யாருமில்லை. அதாவது ராமர் வைத்த குறி தப்பாது என்பதை 'குறிக்கு தக்கியது ராமசரம்' என்பார்கள். இது காலப்போக்கில் 'குருவிக்கு தக்கது ராமேஸ்வரம்' என மாறியது.