உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சிக்கு...

வராகியை வழிபட ஏற்ற திதி பஞ்சமி. மாதம்தோறும் வளர்பிறை, தேய்பிறை பஞ்சமியில் வராகியை வழிபட்டால் உடனடி நன்மை கிடைக்கும். வராகி அர்ச்சனை மந்திரங்களில் 'ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ' என்றொரு வரி உண்டு. ஆஷாட பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் விருப்பமுடன் ஏற்பவள் என்பது பொருள்.பஞ்சமி திதிக்கு உரியவள் வராகி என்பதால் அவளுக்கு 'பஞ்சமி' என்றும் பெயருண்டு. பஞ்சமியன்று விளக்கேற்றி தானியத்தால் கோலமிட்டு வழிபட்டால் எதிரி பயம், கடன் தொல்லை, நிலப்பிரச்னை தீரும். மொத்தத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.