சொர்க்கவாசல் இல்லை
UPDATED : ஜன 13, 2025 | ADDED : ஜன 13, 2025
சாரங்கபாணி பெருமாள் கோயிலில் உள்ள கோமளவல்லித் தாயார் பிறந்து வளர்ந்ததே கும்பகோணத்தில் தான். இந்தத் தாயாரை திருமணம் செய்ய வைகுண்டத்தில் இருந்து தேரில் வந்திறங்கினார் பெருமாள். இதனால் இக்கோயிலில் சாரங்கபாணி சன்னதி தேர் வடிவில் இருக்கும். இப்படி பெருமாளே நேரில் வந்து இறங்கியதால் இத்தலத்தை நித்ய வைகுண்டம், பூலோக வைகுண்டம் எனப் போற்றுகின்றனர். இங்கு சொர்க்க வாசல் என்பது கிடையாது. சாரங்கபாணி பெருமாளை தரிசித்தாலே முக்தி கிடைக்கும்.